SELANGOR

தூய்மையான மாநிலத்திற்கு சிலாங்கூர் மாநிலம் முன்மாதிரி!!

ஷா ஆலாம்,ஜூன்13:

சிலாங்கூர் மாநிலத்தை தூய்மைக்கு முன்மாதிரியாக கொண்டு வர மாநில அரசு பெரும் இலக்கு கொண்டிருப்பதாக கூறிய ஆட்சிக்குழு உறுப்பினர் குப்பைகளை அகற்றும் பணிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மாநில பொதுபோக்குவரத்து மற்றும் புதுக்கிராம மேம்பாட்டு துறை ஆட்சிக்குழு உறுப்பினர் ங் எஸ்ஷி ஹான் இதுதொடர்பில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.

முதற்கட்டமாக குப்பைகளை அகற்றும் கேடிஇபி (KDEB) எனப்படும் வேஸ்ட் மேனஸ்மெண்ட் மற்றும் ஊராட்சிதுறைகளோடு கலாந்தாய்வு செய்யப்படும் என்றார்.

மேலும்,கேடிஇபி அதன் நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் மேலும் ஆக்கப்பூர்வமாகவும் விவேகமாகவும் அதேவேளையில் மாநில அரசின் இலக்கிற்கு ஒப்பவும் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டார்.

இன்றைய சூழலில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறைவாக உள்ளது என்றும் கூறிய அவர் இருப்பினும் மாநில அரசின் இலக்கிற்கு ஈடுகொடுக்கும் வகையில் அந்நிறுவனம் அதன் செயல்பாட்டில் தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

மேலும்,ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குப்பைகளை சுத்தம் செய்தல் மற்றும் அகற்றுதலோடு ஒவ்வொரு இடத்தில் பணியாளர்கள் எந்நேரமும் இருத்தல் ஆகியவையும் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாகவும் ஊராட்சி மன்றம் மற்றும் டத்தோ பண்டார்,ஊராட்சி மன்ற தலைவர்களோடு நோன்பு திறக்கும் நிகழ்வில் அவர் இதனை தெரிவித்தார்.

இதற்கிடையில் அந்நிறுவனத்தின் சேவை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் அந்நிறுவனத்தை அவர் பாராட்டியதாகவும் கூறிய ஆட்சிக்குழு உறுப்பினர் அந்நிறுவனத்தின் ஆக்கப்பூர்வ செயல்பாடு சிலாங்கூர் மாநிலத்தை தூய்மைக்கு முன்மாதிரியாக உருவாக்கும் எனவும் அஸ்மின் அலி கூறியதை அவர் அந்நிகழ்வில் நினைவுக்கூர்ந்தார்.

மேலும்,அந்நிறுவனத்தின் தலைமை இயக்குநர் முன் வைத்த சிலாங்கூர் மாநிலம் முழுவதும் அந்நிறுவனம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதை மாநில அரசு ஆய்வு செய்யும் என்றும் விவரித்தார்.


Pengarang :