SELANGOR

குழந்தைகளின் திறன் மேம்பாட்டில் மாநில அரசு கவனம் செலுத்துகிறது !!

ஷா ஆலம்,ஆக14:

அனைத்து நிலையிலான ஆற்றல் மற்றும் சாத்தியமான திறன் மிக்க குழந்தைகளை உருவாக்கும் தனித்துவத்தில் மாநில அரசு கவனம் செலுத்தி வருவதாக மாநில சுகாதாரம்,சமூகநலன்,மகளிர் மற்றும் குடும்ப மேம்பாடு துறையின் ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமூட் தெரிவித்தார்.

‘ஒழுக்கமும் விவேகமும்’ மிக்க சமூகத்தை உருவாக்க திறன் மிக்க குழந்தைகளை உருவாக்குவது அவசியம் என்றும் கூறிய அவர் அச்சுழச்சியே பின்நாளில் விவேகமான அதேவேளையில் ஒழுக்கமும் கண்ணியமும் மிக்க சமூகமாய் உருவாகும் என்றார்.

நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தங்களின் பங்களிப்பினை ஒவ்வொரு குடிமகனும் செய்திடல் வேண்டும்.அத்தகைய சிந்தனையை நாம் குழந்தை பருவத்திலேயே நன்நிலையில் விதைத்திடல் வேண்டும் என்று அடிப்படை தலைமை மற்றும் தொண்டு எனும் நிகழ்விற்கு தலைமையேற்ற போது அவர் இவ்வாறு கூறினார்.

புதிய தலைமுறையினை நன் நிலையில் சமூக சிந்தனையோடும் நாட்டுப்பற்றோடும் உருவாக்குவதற்கு மாநில அரசு தயார் நிலையில் உள்ளது.நாம் அனைவரும் கரம்கோர்த்து ஒரே சிந்தனையோடு பயணித்தால் அஃது சாத்தியமானதே என்றும் அவர் அந்நிகழ்வில் குறிப்பிட்டார்.


Pengarang :