SELANGOR

பாக்காத்தான் மக்களின் மீது அக்கறை கொண்டது; எதிர்க்கட்சியினரோ இனவாதத்தை தூண்டி வருகின்றனர்

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 7:

எதிர்க்கட்சியினர் இனவாதம் மற்றும் சமயம் ஆகியவற்றை பயன்படுத்தி சிலாங்கூர் மற்றும் மத்திய அரசாங்கத்தை அவதூறு கூறி வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில அமானா கட்சியின் தலைவர் இஸாம் ஹாஸிம் கூறினார். அதே வேளையில், பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணி அரசாங்கம் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

” இனவாதம் மற்றும் சமயம் ஆகியவற்றை பயன்படுத்தி அரசியல் இலாபம் தேட வேண்டாம். மலாய்காரர்கள் உரிமைகளை இழந்து விட்டனர் என்று கதை கட்டி வருகின்றனர். தற்போதைய பிரதமர் என்ன மலாய்காரர் அல்லாதவரா? அவர்களுக்கு வேறு ஏதும் மக்களிடம் கொண்டு செல்ல முடியாது. அதனால் தான் இனவாத அரசியல் நடத்தி வருகின்றனர்,” என்று ஸ்ரீ செத்தியா இடைத்தேர்தலில் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளர் ஹாலிமி அபு பாக்காரை ஆதரித்து இறுதி பிரச்சாரக் கூட்டத்தில் இவ்வாறு பேசினார்.

 

 

 

 

 

 


Pengarang :