NATIONAL

அரசாங்கம் நாட்டின் கடன் தொகை தொடர்பில் வெளிப்படை போக்கை கடைப்பிடிக்க வேண்டும்

கோலா லம்பூர், செப்டம்பர் 6:

நாட்டின் மொத்த கடன் தொகை தொடர்பில் பொய்யான தகவல்களை தராமல் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என்று அரசாங்க ஆலோசக மன்றத்தின் தலைவர் துன் டாய்ம் ஜைனூடின் கூறினார். நடப்பில் உள்ள அரசாங்கம் வெளிப்படையான போக்கைக் கொண்டது. மேலும், ஊழல் நடவடிக்கையை எதிர்த்து செயல்படுவது மட்டுமில்லாமல் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி எடுத்து வருகிறது என்றார். நாட்டின் கடன் தொகை 1 திரிலியன் எட்டியுள்ளது என்ற அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு பயத்தை உண்டாக்கும் என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு டாய்ம் ஜைனூடின் கூறினார்.

” தர மதிப்பீடு நிறுவனம் என்னை சந்தித்தது, நான் பொய் சொல்ல வேண்டும் என்றால் சொல்லி இருக்கலாம். இதுதான் வேண்டும் என்றால் சொல்லி இருக்கலாம். ஆனால், நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும்,” என்று  டிவி3 தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு பதில் அளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.


Pengarang :