SELANGOR

தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொண்டு பயணத்தை தொடர்வோம் !!!

2018-இன் கெஅடிலான் கட்சித் தேர்தலை கட்சியின் அரசியல் பிரிவு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் ஸூரைடா கமாரூடின் அறிவுறுத்தினார். கட்சியின் புதிய தலைமைத்துவம் தேர்தலில் எதிர் நோக்கிய பிரச்சனைகளை எதிர் காலத்தில் ஏற்படாமல் இருக்க உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  கட்சியின் தேர்தல் முடிவுற்றது. தற்போது கட்சியின் அரசியல் பிரிவு நம்பகத்தன்மை வாக்குகள், காணாமல் போன வாக்குகள் போன்றவை தொடர்பில் முடிவு செய்துள்ளது. இதற்கு சரியான முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு அனைத்து தலைவர்களின் முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆகவே, அனைவரும் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் அனைவரும்  ஒருங்கிணைந்த சிந்தனையோடு முன்னேறுவோம்,” என்று கெஅடிலான் தேசிய மாநாட்டில் தமது உரையில் கூறினார்.

 

 

 

 

 

இதனிடையே, ஸூரைடா 2018-ஆம் ஆண்டிற்கான தேர்தலில் சிலாங்கூர் மாநில அங்கத்தினர்கள் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் அஸ்மின் அலி மற்றும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி ஆகிய இருவருக்கும் வழங்கிய ஆதரவுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். சிலாங்கூர் மாநிலம் கெஅடிலான் கட்சியின் கோட்டை என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விட்டது. ஆகவே, சிலாங்கூர் மாநில கெஅடிலான் கட்சியின் தலைமைத்துவம் சிறந்த தலைவர்களால் வழிநடத்த வேண்டும் என்று ஸூரைடா வலியுறுத்தினார்.


Pengarang :