SELANGOR

மந்திரி பெசார்: இந்திய தொழில் முனைவர் திட்டம் தொடரும்

ஷா ஆலம், நவம்பர் 18:

சிலாங்கூர் மாநில அரசாங்கம் இந்திய தொழில் முனைவர் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி கூறினார். இந்த திட்டத்தில் வழி சிலாங்கூர் வாழ் பி40 வர்க்கத்தினர் தங்களின் வருமானத்தை பெருக்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும் என்று அவர் விவரித்தார். இந்திய தொழில் முனைவர் திட்டத்தின் மூலம் புதிய தொழில் முனைவர்களை உருவாக்க முடியும் என்றும் இதன் வழி பொருளாதார வளர்ச்சியில் அவர்கள் பங்கு வகிக்க ஏதுவாக அமையும் என்றார்.

” நாம் சிறுதொழில் செய்ய விரும்பும் மக்களுக்கு உதவ உறுதி பூண்டு இருக்கிறோம். இதன் மூலம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். இத்திட்டத்தின் கீழ் சாமான்ய மக்களும் வியாபாரத் துறையில் வெற்றி பெற முடியும். எதிர் வரும் நவம்பர் 23-இல் தாக்கல் செய்யும்  சிலாங்கூர் மாநில வரவு செலவுத் திட்டத்தில் பி40 வர்க்கத்தினர் பயன் பெறும் வகையில் திட்டங்கள் வரையப்படும்,” என்று மிட்லண்ஸ் பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற சிலாங்கூர் இந்தியர் தொழில் முனைவர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுது அமிரூடின் ஷாரி இவ்வாறு கூறினார்.


Pengarang :