SELANGOR

நகர்புறம் மற்றும் கிராம வளர்ச்சி திட்ட ஆய்விற்கு வெ.1.42 மில்லியன்

ஷா ஆலம், நவம்பர் 23:

சிலாங்கூர் மாநில நகர்புறம் மற்றும் கிராம மேம்பாட்டு விரித்தியின் ஆய்விற்கு அரசாங்கம் வெ.1.42 மில்லியனை ஒதுக்குவதாக மந்திரி பெசார் அமிரூடின் ஷாரி தெரிவித்தார்.

மாநிலத்தின் 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்பித்த போது இதனை தெரிவித்த மந்திரி பெசார் இதன் மூலம் நகர்புறம் மற்றும் அதனை சார்ந்த நகர்பல்புற கிராமங்களின் வளர்ச்சி குறித்தும் ஏற்ற அபிவிருத்திகள் குறித்தும் துள்ளியமாக ஆரய முடியும் என்றார்.

இதன் மூலம் ஏற்புடைய மேம்பாட்டுத் திட்டங்களை முறைப்படுத்துவதோடு மக்களின் நலனிலும் அவர்களின் அழகியல் வாழ்வியல் சூழலுக்கும் உறுதுணையாக இருக்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேம்பாடும் வளர்ச்சியும் மக்களையும் அவர்கள் சார்ந்த வாழ்வியல் சூழலையும் பாதிக்ககூடாது.மேலும்,சுற்றுச்சூழலும் இயற்கை வளமும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்த மந்திரி பெசார் அதனை கவனத்தில் கொண்டே இந்த ஆய்வு முறை தேவைப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

அதேவேளையில்,தனியார் மற்றும் அரசு மேம்பாட்டுத் திட்டங்களும் முறையான ஆய்விற்கு பின்னர் துரிதமாக மேற்கொள்ள இதுவுதவும் என்றும் அமிரூடின் ஷாரி குறிப்பிட்டார்.

இந்த ஆய்வின் மூலம் ஒவ்வொரு இடத்தின் பண்பாடு மற்றும் வாழ்வியல் சூழலும் அதன் தனித்துவம் நிலை நிறுத்தவும் இந்த ஆய்வியல் உதவும் என்றார்.


Pengarang :