NATIONAL

நிதியளித்த பொது மக்களுக்கு அரசாங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது

புத்ரா ஜெயா, டிசம்பர் 23:

எதிர் வரும் டிசம்பர் 31, 2018-இல் மலேசிய நிதியம் அதிகாரப்பூர்வமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இது வரை நிதி உதவி அளித்த அனைத்து மலேசிய மக்களுக்கும் நன்றிகளை அரசாங்கம் தெரிவித்து கொள்வதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் தமது அறிக்கையில் கூறினார். இந்த நிதியில் பங்கெடுத்த தனிநபர், நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் தேசிய கணக்கியல் இலாகாவின் நிலையான வைப்பு நிதியில் வரும் வட்டி விகிதம் ஆகியவை அடங்கும் என்று அவர் விவரித்தார்.

” இன்று வரை (டிசம்பர் 23, 2018) மலேசிய நிதியத்தின் மொத்த தொகை ரிம 199,140,217.80 ஆகும்,” என அந்த அறிக்கையில் லிம் குவான் எங் தெரிவித்தார்.

தகவல் : பெர்னாமா


Pengarang :