NATIONAL

கச்சா எண்ணெய் விலை $50-க்கு குறைந்தால் 2019-இன் பட்ஜெட் மறுபரிசீலனை செய்யப்படும்

கோலா லம்பூர், டிசம்பர் 23:

அனைத்துலக கச்சா எண்ணெய் சந்தை விலை $50 கீழ் குறைந்தால் மட்டுமே 2019-ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மறுபரிசீலனை செய்யப்படும் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். நிதியமைச்சு கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு $70 அடிப்படையில் பட்ஜெட் நிர்ணயம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைவாக உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆண்டில் மிகக் குறைந்த அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. உலக பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த சூழ்நிலையில் ஏற்பட்டுள்ளது.


Pengarang :