SELANGOR

சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் கணபதி ராவின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்,தை மாதத்தின் பிறப்பை அறுவடைத் திருநாளாக,பொங்கல் தினமாகவும் உலகத் தமிழினம் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ்ப் புத்தாண்டின் முதல் நாளாகவும்,தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு விழாக்களில் தைத்திருநாள் என்பது முக்கியமான ஒரு விழாவாகவும் தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகின்றது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கொண்டாடி வரும் இத்திருநாள் இயற்கைக்கும்,ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் நன்றி சொல்லும் நன்நாளாகவும் விளங்கி வருகின்றது.
நம் நாட்டில் மூவினங்கள் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் பல ஆண்டுகளாக பொங்கல் விழாவை கொண்டாடி வந்தாலும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் கடந்த 10 வருடங்களாக மாநில விழாவாக அதிகாரப்பூர்வமாக இம்மாநிலத்தில் கொண்டாடி வருகின்றது.
இதனால் பிற இனத்தினர் நமது பாராம்பரியத்தையும் கலை கலாச்சாரத்தையும் கற்று தெரிந்துக்கொள்வதுடன் இப்பண்டிகையின் வரலாற்றையும் அறிந்து கொள்ளும் வகையில் இந்நிகழ்ச்சி மாநில அளவில் ஆங்காங்கே நடத்தப்பட்டு வருகின்றது.

ஒரு உயிர் வாழ மற்ற உயிர்கள் தியாகம் செய்வதை உணர்ந்து நன்றி கூறி குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இணைந்து இவ்வருட பொங்கல் விழாவை கொண்டாடி மகிழ்ந்து அன்பை பரிமாறிக்கொள்ளுங்கள்.
அதே சமயம் கல்வியும் பொருளாதரமும் நமது சமுதாயத்தின் வெற்றியின் அறிகுறி என்பதை நினைவில் வைத்துக்கொண்டு புதிய ஆண்டாய் பிறக்கும் இந்த தை புத்தாண்டில் புதிய சபதம் ஏற்று வாழ்வில் எல்லா சுகங்களையும் பெற்று நீண்ட ஆயுளுடனும் மன மகிழ்ச்சியுடனும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து தை பொங்கலை வரவேற்போம்.

அன்புடன்,
வீ.கணபதி ராவ்
சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் மற்றும்
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்


Pengarang :