NATIONAL

மக்களின் பாதுகாப்பு உணர்வு மீது ஆய்வு: சுயேட்சை அமைப்பை காவல் துறை நியமிக்கும்

கோலாலம்பூர், ஜன.16-

பாதுகாப்பு உணர்வு குறித்து மக்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டம் மீது ஆய்வு மேற்கொள்ள சுயேட்சை அமைப்பு ஒன்றை அரச மலேசிய போலீஸ் படை நியமிக்கவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் ஃபுஸி ஹருண் கூறினார்.

நாட்டின் குற்றச்செயல் குறியீடு ஆண்டுதோறும் இறங்குமுகமாக இருந்தாலும், மக்களின் பாதுகாப்பு உணர்வு திருப்திகரமான அளவில் இல்லை என்றார் அவர்.

மக்களின் கண்ணோட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் சுயேட்சை அமைப்பு ஒன்றை அடையாளம் காணும்படி பிடிஆர்எம் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவு, குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளுக்குத் தாம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் சொன்னார்.

இந்த ஆய்வின் வழியாக மக்களின் பாதுகாப்பு உணர்வை மேம்படுத்தும் வழிகள் அடையாளம் காணப்படுவதோடு பாதுகாப்பு குறித்த மக்களின் கண்ணோட்டத்தையும் சரிசெய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புக்கிட் அமானில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்திற்குப் பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்ட தகவலை வெளியி


Pengarang :