SELANGOR

ஹிஜ்ரா பங்கேற்பாளர்களின் சமூக பொருளாதாரத்தை கோஹிஜ்ரா உயர்த்தும்

ஷா ஆலம், ஜன.25:

ஹிஜ்ரா சிலாங்கூர் பங்கேற்பாளர்கள் மற்றும் பணியாளர்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த விஸ்மா கோப்பராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் (கோஹிஜ்ரா) தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

கோஹிஜ்ராவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 11,057 பேரை எட்டியுள்ளது என்றும் அவர்களில் பெரும்பாலோர் மைக்ரோ கிரேடிட் திட்டத்தில் முன்பு கடனுதவி பெற்றவர்கள் என்றும் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

சிலாங்கூரின் தொழில்முனைவர்களின் தரத்தை உயர்த்தும் நோக்கத்திலான “மெந்தோர் மெந்தீ” திட்டம், “ஜீரோ டூ ஹீரோ” உட்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த கோஹிஹ்ரா ஒரு மாற்று தளமாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதன் வழி கடனுதவி பெறுபவர்களின் பொருட்களின் தரத்தை உயர்த்துவது தவிர்த்து கோஹிஜ்ரா தனது நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்ய முடியும் என்றார் அவர்.

மேலும், கடனுதவி பெற்றவர்கள் குறிப்பாக பூமிபுத்ரா வர்த்தகர்கள் கோஹிஜ்ராவில் இடம்பெற்றுள்ள இதர வர்த்தகர்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்வதற்கு ஹிஜ்ரா உதவிட முடியும் என்றும் அவர் சொன்னார்.


Pengarang :