NATIONAL

மின்னஞ்சல், கடிதம் பெற்றவர்கள் வருமான வரி வாரியத்துடன் தொடர்பு கொள்வீர்

புத்ரா ஜெயா, பிப்.1:

உள்நாட்டு வருமான வரி வாரியத்திடமிருந்து (எல்எச்டிஎன்) பிகேபிஎஎஸ் எனப்படும் தன்னார்வ சிறப்பு நிகழ்ச்சி குறித்து மின்னஞ்சல் அல்லது கடிதம் பெறுபவர்கள் கலக்கம் அடையாமல் விளக்கம் பெற அந்த வாரியத்துடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வரி செலுத்துபவர்களுக்கான சில பிரிவுகளுக்கான அபராதத் தொகையில் 10 முதல் 15 விழுக்காடு வரை மட்டுமே செலுத்தும் வாய்ப்பை இந்த நிகழ்ச்சி வழங்கும் என்று வாரியத்தின் உயர் அதிகாரி டத்தோஸ்ரீஉ சபின் சாமிதா கூறினார்.

வருமான வரி பாரம் / பெட்ரோலிய அறிக்கை பாரம் / சொத்துடைமை விற்பனை லாப அறிக்கை பாரம் போன்றவற்றை முறையாக சமர்ப்பிக்காதவர்கள் இந்தப் பிரிவில் அடங்குவர்.

அதே வேளையில், சமர்ப்பிக்கப்பட்ட பாரங்களில் வருமானம் குறித்த பொய்யான தகவல் / நில விற்பனை லாப தொகை அறிவிப்பில் குளறுபடி மற்றும் வரி விலக்கு பெற தவறான தகவல் மற்றும் வரையறுக்கப்பட்ட காலக் கெடுவிற்குப் பின்னர் பாரங்கள் சமர்ப்பித்தவர்களும் இந்தப் பிரிவில் உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றார் அவர்.


Pengarang :