SELANGOR

கல்வி துறையில் எம்பிபிஜே யுனெஸ்கோவின் அங்கீகாரத்தை பெற்றது

ஷா ஆலம், பிப்.21:

ஐக்கிய நாட்டு அமைப்பின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசாரமிக்க மாநகரத்திற்கான விருது பெற்ற 10 மாநகரங்களில் ஒன்றாக பெட்டாலிங் ஜெயா தேர்வு பெற்றது. இதன் வழி மாநகராட்சி மன்றம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

இந்த மாநகரம் அடைந்த மேம்பாட்டை குறிப்பாக கல்வித் துறையில் அடைந்த மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது என்று எம்பிபிஜே பேச்சாளர் கூறினார்.

வரும் அக்டோபர் மாதம் கொலம்பியா, மேடெலினில் நடைபெறவுள்ள அனைத்துலக கல்விகற்ற நகர கருத்தரங்கில் இந்த அங்கீகாரம் வழங்கப்படும் என்று மன்றம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சிலாங்கூரில் மொத்தம் 101 ஆரம்பப் பள்ளிகளும் இடைநிலைப்பள்ளிகளும் உள்ளன. மேலும், இங்கு 182 பாலர் பள்ளிகளும் 45 உயர்கல்விக் கழகங்களோடு 6 சமூக நூலகங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Pengarang :