SELANGOR

கினபாலு உச்சியை அடைந்து சாதனை!

குண்டாசாங், பிப்.21:

கினபாலு மலையின் உச்சத்தை அடைந்த சிலாங்கூரின் ஆய்வுக் குழுவினர் மாநிலம் மற்றும் தேசிய கொடிகளை அங்கு பறக்கவிட்டதன் மூலம் சாகச நடவடிக்கைகளில் ஈடுபடும் இளைய தலைமுறையினருக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளனர்.

ஒரு சில தரப்பினர் சாத்தியமற்றது என்றும் மிகவும் சிரமம் என்றும் நினைக்கும் விஷயங்களை முயன்றால் சாதிக்க முடியும் என்று இளைய தலைமுறையினருக்கு ஒரு புதுத் தெம்பை இந்த சாதனை அளித்துள்ளது என்று இளையோர், விளையாட்டு மற்றும் மனித வள மேம்பாட்டுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது கைருடின் ஒஸ்மான் கூறினார்.

“இந்த மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலர் முதல் முறையாக இதில் பங்கேற்றுள்ள போதிலும், கினபாலு மலையின் உச்சியை அடைந்ததன் மூலம் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று நிரூபித்துள்ளனர்” என்றார் அவர்

“தென்கிழக்காசியாவில் மிகவும் உயரமான கினபாலு மலை உச்சியில் மாநில மற்றும் தேசிய கொடிகளைப் பறக்க விட்டதன் மூலம் சிலாங்கூர் மாநில இளைய தலைமுறையினருக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கின்றனர்” என்று அவர் பாராட்டினார்.


Pengarang :