SELANGOR

மலேசியர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும் போலியான தகவல்கள்

சைபர் ஜெயா, மே 17-

இணையம் வழி பரப்பப்படும் போலி தகவல்கள் உட்பட பல்வேறு மோசடி நடவடிக்கைகள் குறித்து பல புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஆயினும், இது போன்ற நடவடிக்கைகளை நம்பி மலேசியர்களில் பலர் ஏமாற்றப்படும் சம்பவங்கள் 2016ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய சைபர் 999 (சிபிஎம்) இதுவரை பெற்ற இணைய குற்றவியல் புகார்கள் 9 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் போலியான உள்ளடக்கம், சைபர் தொல்லை, சேவை மறுப்பு, சைபர் மோசடி, அத்துமீறல், அத்துமீறல் முயற்சி, எளிதில் அச்சுறுத்தலுக்கு இலக்காகும் அறிக்கைகள் ஆகியவை அடங்கும்.

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வரையில் பெறப்பட்ட 2,977 புகார்களில் மோசடி குறித்து 1,963 புகார்களும் இதனை அடுத்து தீங்கிழைக்கும் குறியீடு குறித்து 390 புகார்களும் பெறப்பட்டுள்ளன. இவற்றுக்கு அடுத்த நிலையில் அத்துமீறல் குறித்து 339, உள்ளடக்கம் தொடர்பாக 100, சைபர் தொல்லை குறித்து 88, அத்துமீறல் முயற்சி குறித்து 34 மற்றும் பலவீனமான அறிக்கைகள் குறித்து 21 புகார்களும் பெறப்பட்டுள்ளன.

மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்தின் புள்ளிவிபர அறிக்கையின் படி 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் 28.7 மில்லியன் மலேசியர்கள் இணைய பயனீட்டாளர்களாக இருக்கின்றனர். இது மலேசிய மக்கள் தொகையில் 87.4 விழுக்காடாகும்.


Pengarang :