NATIONAL

“நில பரிமாற்றம்” மீதான விவகாரம்: ஞாயிரன்று :ஹிசாமூடின் வாக்குமூலம் அளிப்பார்

புத்ராஜெயா, ஜூன் 21:

தற்காப்பு அமைச்சின் “நிலப் பரிமாற்றம் மீதான விவகாரம் தொடர்பாக முன்னாள் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடின் ஹூசேன் வரும் ஞாயிற்றுக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் (எஸ்பிஆர்எம்) தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, முன்பு ஒரு சமயம் தற்காப்பு அமைச்சராக பதவி வகித்துள்ள முன்னாள் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் நேற்று தனது வாக்குமூலத்தை பதிவு செய்தததாக எஸ்பிஆர்எம் துணை ஆணையர் டத்தோஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும் விசாரணைக்கு அழைக்கப்படும் சாத்தியத்தை அவர் மறுக்கவில்லை.
“நஜிப்பை நாங்கள் இன்னும் அழைக்கவில்லை. போதிய ஆதாரங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நபர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் பொருத்தமான நேரத்தில் அவர் அழைக்கப்படுவார்” என்று 1எம்டிபி வழக்கு தொடர்பான எஸ்பிஆர்எம் செய்தியாளர் கூட்டத்தில் அஸாம் கூறினார்.


Pengarang :