PUTRAJAYA, 20 Jun — Perdana Menteri Tun Dr Mahathir Mohamad menjawab pertanyaan wartawan pada Majlis Sambutan Hari Raya Aidilfitri Jabatan Perdana Menteri hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

பாலியல் காணொளி அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும் – பிரதமர்

கோலாலம்பூர், ஜூலை 23:

பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் தொடர்பில் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று செவ்வாய்க்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக பெயரிட்டு கூறவில்லை என்றாலும், அது பிகேஆர் துணைத் தலைவரை சம்பந்தப்படுத்திய விவகாரம் என்று நம்பப்படுகிறது. இந்த காணொளி அரசியல் நோக்கங்களுக்காகவே தயாரிக்கப்பட்டது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஒரு சிலரின் தனிப்பட்ட அரசியல் வெற்றியைத் தடுக்க இது உருவாக்கப்பட்டுள்ளது” என்று அவர் தனது வலைப்பதிவில் தெரிவித்தார்.

மேலும், இந்த காணொளியானது சம்பந்தப்பட்டவரை அமைச்சரவையிலிருந்து அகற்றுவதை நோக்கமாகக் கொண்டது என்றார்.

நான் ஆட்சியில் இருப்பதால் இந்த நடவடிக்கை என்னால் எடுக்க முடியும்நான் இந்த நடவடிக்கை எடுக்கும்போது, இதனை செய்த தரப்பினர் வெற்றியடைந்ததாக ஆகி விடும்” என்று அவர் கூறினார்.

இந்த காணொளியானது அரசியல் ரீதியாக மட்டுமே தீர்க்கப்படும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒரு தார்மீக பிரச்சினை அல்லஇது ஓர் அரசியல் விவகாரம். ஆகவே, ஓர் அரசியல் பிரச்சினையாகவே இது தீர்க்கப்படும்” என்று அவர் கூறினார்.


Pengarang :