Eddin Syazlee Shith
NATIONAL

சிசிடிவி பதிவுகள்: தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டவை

கோலாலம்பூர், ஜூலை 23-

பொது அல்லது தனியார் இடங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ரகசிய ஒளிப்பதிவு கேமராவில் பதிவு செய்யப்பட்ட பதிவுகள் யாவும் 2010ஆம் ஆண்டு தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டத்திற்கு உட்பட்டவை என்று தகவல் மற்றும் பல்லூடக துறை துணையமைச்சர் எடின் ஸியாஸ்லீ ஷித் கூறினார்.

சம்பந்தப்பட்ட பதிவுகளின் உரிமையாளர் தனிநபர் தரவு பாதுகாப்பு துறையில் (ஜேடிபிடி) பதிவு செய்திருப்பின் அப்பதிவுகளைப் பரப்புவது ஒரு குற்றமாகக் கருதப்படும் என்றார் அவர்.
“ஹோட்டல் நிர்வாகம் தனிநபர் தரவு பாதுகாப்பு துறையில் (ஜேடிபிடி) பதிவு செய்திருப்பின் அதன் ரகசிய ஒளிப்பதிவு கேமரா பதிவுகள் இந்தச் சட்டத்தால் பாதுகாக்கப்படும்” என்றார்.

ரகசிய ஒளிப்பதிவு கேமராவின் பதிவுகளைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகுமா என்று மேலவையில் செனட்டர் முஸ்தாபா கமால் கேட்ட துணைக் கேள்விக்கு துணையமைச்சர் எடின் மேற்கண்ட விளக்கத்தை அளித்தார்.


Pengarang :