NATIONAL

வின்வெளி தொழில்துறையை மேம்படுத்த வியூகத் திட்ட அறிக்கை

கோலாலம்பூர், ஆக.2-

சிறப்பு நுட்பத் தொழில் குழு (டிடபள்யூஜி) வரையும் ஐந்தாண்டு வியூக அறிக்கையின் துணையோடு நாட்டின் 12ஆவது மலேசிய திட்டத்தில் வின்வெளி தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த டிடபளியூஜி குழுவில் தொழில்துறை நடத்துநர்கள், வின்வெளி தொழில்துறை துறை சங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆகியவை ஈடுபடுத்தப்படும் என்று பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி கூறினார்.

2030ஆம் ஆண்டு வாக்கில் வின்வெளி தொழில்துறையின் மூலம் 55.2 பில்லியன் வருவாய் கிட்டும் என்றும் 32,000 புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற மலேசிய வின்வெளித் துறை திட்ட வரைவிந் நோக்கம் நிறைவேறும் என்றும் தமது அமைச்சு நம்புவதாக அவர் சொன்னார்.

அதே வேளையில், இந்த வின்வெளித் துறையில் முதலீடு செய்ய விரும்பும் அந்நிய நாட்டு நிறுவனங்களை தமது அமைச்சு வரவேற்பதோடு உயர் வருமானம் தரும் வேலை வாய்ப்புகளும் பெருகும் என்றும் நம்பிக்கை கொண்டுளது என்றார் அவர்.


Pengarang :