NATIONAL

இஸ்லாம் அல்லாதோரிடம் மன்னிப்பு கோரினார் ஜாகீர்

கோலாலம்பூர், ஆக.20-

அண்மையில் கோத்தா பாருவில் நிகழ்த்திய உரையின்போது முஸ்லிம் அல்லாதோரின் மனதைப் புண்படுத்தும் வகையில் பேசியதற்காக சமய போதகர் ஜாகீர் நாய்க் மன்னிப்பு கோரினார்.

தாம் ஓர் இனவாதி கிடையாது என்றும் தமது முந்தைய அறிக்கையில் சில விஷயங்கள் கூடுதலாகப் புனையப்பட்டுள்ளன என்றும் ஜாகீரை மேற்கோள்காட்டி மலேசியகினி இணைய நாளேடு செய்தி வெளியிட்டது.

‘நான் அமைதியைப் போற்றுபவன், ஏனெனில் அல்-குர் ஆன் அதைத்தான் போதிக்கிறது’ என்றார் ஜாகீர்.

‘உலகத்தில் அமைதியைப் பரப்புவதே எனது நோக்கமாகும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, என்னை விமர்சிப்பவர்கள் அதற்குத் தடையாக இருக்கின்றனர்’ என்று அந்நாளேட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஜாகீர் தெரிவித்துள்ளார்.

தமது அறிக்கை தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டதாக அவர் மீண்டும் வலியுறுத்தியதோடு இந்நாட்டில் இனங்களுக்கிடையே பிரச்னைகளைத் தாம் ஏற்படுத்துவதாகத் தம்மீது தவறான குற்றஞ்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.


Pengarang :