NATIONAL

நிரந்தர குடியிருப்பு தகுதி பெற்றவர்களும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே – முஹீதீன் யாசின்

 

கோலாலம்பூர், ஆக.26-
உணர்ச்சியமயமான இன விவகாரத்தை எழுப்புபவர்கள் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற்றவர்கள் உட்பட எவராயினும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று உள்துறை அமைச்சர் டான்ஸ்ரீ முஹீதீன் யாசின் தெரிவித்தார்.

நாட்டின் குடியுரிமை பெற்றவர்கள் எந்த அளவிற்கு சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டுமோ அதைக் காட்டிலும் அதிகமாக குடியிருப்பு தகுதி பெற்றவர்கள் கடைபிடிக்க வேண்டும். ஏனெனில் அது சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட வெகுமதி ஆகும் என்றார் அவர்.

“ஜாகீர் நாய்க் ஓர் இஸ்லாமிய சமய போதகராக இருந்தாலும். இப்போது அவர் எழுப்பியுள்ள சர்ச்சைக்குரிய விவகாரத்தை எழுப்புவதைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் அமைதியாக இருக்காது. ஏனெனில் அவரது செயல் பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதோடு நாட்டின் நிலைத்தன்மைக்கும் மருட்டலை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

நிரந்தர குடியிருப்பு தகுதி அல்லது குடியுரிமை பெற்றவர்களாக இருந்தாலும் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டவர்களே என்று முஹீதீன் தெளிவுபடுத்தினார்.


Pengarang :