SELANGOR

உயர்க்கல்விக் கழகங்களின் நிபுணத்துவ ஆற்றல் ஒருங்கிணைக்கப்படும்! – மந்திரி பெசார்

ஷா ஆலம், ஆக.29-

மாநிலம் முழுவதிலும் உள்ள உயர்க்கல்வி கழகங்களின் நிபுணத்துவத்தை ஒன்றிணைக்கும் வியூகம் வழி சிலாங்கூரின் பொருளாதாரம் வலுப்பெறும் என்று மாநில அரசு நம்புகிறது.

சிறந்த கல்வி முறை என்பது வெறும் அடிப்படை வசதிகளைக் கொண்டு மதிப்பிடப்படுவதில்லை. மாறாக, பல்கலைக்கழகம் ஒன்றில் இருக்கும் கல்வி மற்றும் திறனாற்றலை ஒன்று திரட்டுவதன் மூலம் அது மிகப் பெரிய ஆற்றலாக உருவெடுக்கும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி கூறினார்.

இது பின்னர் நாட்டின் உருவாக்கத்தில் உயர் மதிப்புமிக்க சொத்தாக இருப்பதோடு சிலாங்கூரின் மேம்பாட்டிற்கும் பேருதவியாக இருக்கும் என்றார் அவர்.
“பௌதிகம், கணிதம், அறிவியல், பொறியியல் ஆகிய பாடங்கள் மட்டுமல்லாது சமூக அறிவியல் போன்ற பாடங்களும் ஒன்றிணைக்கும் நடவடிக்கையில் உட்படுத்தப்படும்” என்றார்.


Pengarang :