Bermula tahun depan, semua pelajar sekolah rendah akan diberi sarapan percuma untuk memastikan mereka mendapat nutrisi mencukupi.
NATIONAL

ஆரம்பப்பள்ளியில் இலவச காலை உணவு; எம்பிஎம் ஆதரவு!!!

கோலா லம்பூர், ஆகஸ்ட் 30:

கல்வி அமைச்சு அடுத்த ஆண்டு தொடக்கம் எல்லா ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கும்  அமல்படுத்த இருக்கும் இலவச காலை உணவு திட்டத்திற்கு மலேசிய இளைஞர் இயக்கம் (எம்பிஎம்) தனது ஆதரவை வழங்கி உள்ளது என இயக்கத்தின் உதவித் தலைவர் முகமட் ஷேர்ஹான் நிஜாம் கூறினார். இந்த முயற்சி “ஒரே கல்லில் இரண்டு மாங்காய்” என அவர் வர்ணித்தார். இதன் வழி மாணவர்களின் பள்ளிக்கான வருகையை ஊக்குவிக்கவும் மற்றும் மாணவர்கள் சத்துள்ள உணவை உண்ணவும் வழி வகுக்கும் என்று தாம் நம்பிக்கை தெரிவித்தார்.

” கல்வி அமைச்சு அமல்படுத்த இருக்கும் இந்த திட்டத்தின் மூலம் வறுமையான புறநகர் தரப்பினரும் , நகர் புற குறைந்த வருவாய் ஈட்டும் பிரிவினரும் மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். இன்னும் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பசியோடு வருவதாகவும், சிலர் காலை உணவு அருந்தாமலும் வருகின்றனர். பள்ளிக்கு வருவதற்கான பேருந்து கட்டணம், கல்வி கற்பித்தல் ஆகியவற்றிற்கான பொருட்கள், எதிர் காலத்தில் கல்விக்கு சேமிப்பு என்று காலை உணவை தவிர்க்கும் மாணவர்கள்,” என்று தமது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.


Pengarang :