NATIONAL

இணைய கடனுதவி சேவை: அமைச்சு பரிசீலிக்கிறது

கோலாலம்பூர், அக்.23-
இணையத்தில்  கடனுதவி சேவை வழங்குவதற்கான சில விண்ணப்பங்களை தனது அமைச்சு பரிசீலித்து வருவதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தது.
இது போன்றதொரு உரிமம் இதுவரை அங்கீகரிக்கப்படவில்லை. நாட்டில் பாரம்பரிய மற்றும் இணைய  கடனுதவி சேவைகள் அமல்படுத்தப்படுவதற்கு ஏதுவாக பணி வழக்க நடைமுறையில் (எஸ்ஒபி) மாற்றங்கள் செய்யப்படுவதோடு சட்டத்திலும் திருத்தம் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் ஜுரைடா கமாருடின் கூறினார்.

“கடனுதவி பெறுநருக்கும் வழங்குவோருக்கும் இடையிலான பரிவர்த்தனை எளிதாக்கும் என்பதால் இதை ஓர் ஆக்கப்பூர்வ விவகாரமாக அமைச்சு கருதுகிறது” என்றார் அவர்.
“இந்த விவகாரம் குறித்து துல்லிய ஆய்வு செய்யப்படுவதாகவும் கடனுதவு சம்பந்தப்பட்ட இரு தரப்புக்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :