SELANGOR

தண்ணீர் குழாய் மாற்றும் நடவடிக்கை 2020 மத்தியில் பூர்த்தியடையும்!

ஷா ஆலம், நவம்பர் 6:

மாநிலம் முழுவதிலும் உள்ள 438 கிலோமீட்டர் நீளங்கொண்ட குழாய்களைக் கட்டம் கட்டம் மாற்றும் நடவடிக்கை 2020ஆம் ஆண்டு மத்தியில் நிறைவுபெறும் எனக் கணிக்கப்படுகிறது.

2016ஆம் தொடங்கி இதுவரை 365.16 கிலோமீட்டர் தூர நீளங்கொண்ட குழாய்களை மாற்றப்பட்டுள்ளன என்றும் மேலும் 72.84 கி.மீ. நீளத்திலான குழாய்கள் தற்போது மாற்றப்பட்டு வருவதாகவும் பொது வசதி மற்றும் அடிப்படை கட்டமைப்பு, நவீன விவசாய்ம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் இஸாம் ஹாஷிம் கூறினார்.

2019ஆம் ஆண்டில், 168 கிலோ மீட்டர் தூர பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றின் வடிவமைப்பு மற்றும் குத்தகை போன்றவை பரிசீலனையில் உள்ளன என்றார் அவர். 2016ஆம் ஆண்டு தொடங்கி 2019ஆம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்திற்கு 526 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.


Pengarang :