Haniza Talha. Foto
SELANGOR

ரூமா இடாமான் வீடுகளை விற்கக் கூடாது!

ஷா ஆலம், நவ.7-

சந்தை விலை அதிகரிப்பு குறித்த ஊக நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காவே ரூமா இடாமான் வீடுகளை மீண்டும் விற்கப்படுவதை மாநில அரசாங்கம் தடுப்பதற்கு காரணம் என்று வீடமைப்பு மற்றும் நகர்ப்புற வாழ்க்கை துறைக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் ஹானிஸா தல்ஹா கூறினார்.

இந்த மறு விற்பனை நடவடிக்கையானது சில தரப்பினர் முதலீட்டு காரணங்களுக்காக சம்பந்தப்பட்ட வீடுகளை வாங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றார் அவர்.
ஒவ்வொரு ரூமா இடாமான் திட்டம் மேற்கொள்ளும் போதும் அதற்கான நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இவ்வீடுகளை வாங்குவோர் ஐந்தாண்டுகளுக்குள் இவற்றை அடுத்தவரிடம் விற்கக் கூடாது. என்ற நிபந்தனையும் இதில் அடங்கும் என்றார் அவர்.

எனவே, உண்மையாகவே தகுதி விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த வீடுகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும், நிபந்தனைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நினைவுருத்தினார்.


Pengarang :