NATIONAL

மலேசியருக்கு நேற்று சிங்கப்பூரில் துக்கு !!!

சிங்கப்பூர், நவம்பர் 23:

மலேசியாவைச் சேர்ந்த அப்துல் ஹெல்மி என்பவருக்கு சிங்கப்பூர் சாங்கி சிறைச்சாலையில் நேற்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

வருடம் 2017 லில் 16.56g ஹெராயின் போதைபொருளை சிங்கப்பூருக்குள் கடத்தி வந்த குற்றத்திற்காக அவருக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் அதிபரிடம் சமர்ப்பித்த கருணை மனு நிராகரிக்கப் பட்டதும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே மலேசியர்களுக்கு தொடர்சியாக மரண தண்டனைகள் விதிக்கப் படுவது தொடர்பில் மலேசியா கவலை தெரிவித்தது. மலேசிய பிரதம துறை அமைச்சர் லியூ, போதைப் பொருள் கடத்தலின் உண்மையான உரிமையாளர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிருத்த வேண்டும் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த சிங்கப்பூர், குற்றம் சாட்டப்பட்ட அப்துல் ஹெல்மிக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்கப்பட்டதாகவும், பின்னரே குற்றம் நிருபிக்கப் பட்டு மரணதண்டனை நிறைவேற்றப் பட்டதாகவும் கூறியது.

இன்னும் நான்கு மலேசியர்கள் இந்த குற்றத்திற்காக மரணதண்டனை விதிக்கப்பட்டு அதிபரின் கருணைக்காக காத்திருக்கின்றனர். சிங்கப்பூரில் போதைப்பொருட்களை கடத்தினால் கட்டாய மரணதண்டனை விதிக்கப்படுகிறது,

#மலேசிய இன்று


Pengarang :