NATIONAL

சவால்மிக்க பொருளாதாரச் சூழலிலும் பீடு நடைபோடு கூட்டுறவு வர்த்தகத் துறை

கோலாலம்பூர், நவ.26-

சவால் மிகுந்த பொருளாதார சூழலிலும் கூட்டுறவு வர்த்தக துறை தொடர்ந்து விரிவாக்கம் காண்பதோடு போட்டியாற்றலோடு இருக்கிறது என்று தேசிய அங்காத்தான் கோப்பிராசி பெர்ஹாட் (அங்காசா) தலைவர் டத்தோ அப்துல் ஃபாத்தா அப்துல்லா கூறினார்.

இதற்கு காரணம், கூட்டுறவு துறையில் பரந்த சந்தை மற்றும் பெரிய அளவிலான சந்தையை அடையக்கூடிய சாத்தியமும் உள்ளது என்று அவர் விவரித்தார்.
“உதாரணமாக, ஆசியான் அளவில் பார்த்தால் சுமார் 65 மில்லியன் பேர் கூட்டுறவு உறுப்பினர்களாக உள்ளனர்.

எனவே இது ஒரு மிகப் பெரிய சந்தை. உலகளவில் கண்ணுற்றால், இந்த எண்ணிக்கை 1.5 பில்லியனைத் தாண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனவே தான், பொருளாதார நெருக்கடி காலங்களிலும் கூட்டுறவு வனிகத் துறை தொடர்ந்து சீராக நடைபோடுகிறது. இதன் காரணமாகத்தான் நம் நாட்டில் கூட்டுறவு கழகம் 100 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளது என்றார் அவர்.


Pengarang :