NATIONAL

மலேசிய கொடியின் முக்கியத்துவம் அறிய நடவடிக்கை எடுப்பீர்!

கோலாலம்பூர், நவ.29-

மலேசிய கொடியின் முக்கியத்துவம் மற்றும் அதன் மீதான விழிப்புணர்வை அதிகரிக்க சமுதாயத்திற்கும் நாட்டின் கல்விக் கழகங்களிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்று மலேசிய ஒருமைப்பாடு அறவாரியத்தின் அறங்காவலர் லீ லாம் தாய் கூறினார்.

மலேசியர்கள் அனைவரும் தேசிய கொடியின் மகத்துவத்தை அறிந்து வைத்திருப்பதோடு அதற்கு மரியாதை வழங்குவது அவசியமாகும். இந்த உணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் சம்பந்தப்பட்ட அமைச்சுடன் அரசு சாரா அமைப்புகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

நமது கொடி விவகாரத்தை நாம் சாதாரணமாக கருதக் கூடாது. கொடியை சரியான வகையில் பறக்க விடுவது அவசியமாகும். அதைத் தவறான முறையில் பறக்கச் செய்வது என்பதை நாட்டை அவமதிப்பதற்கு ஒப்பான செயலாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

நாட்டின் ஒற்றுமை சின்னமாக விளங்குவதோடி நாட்டின் மீதான பற்று, விசுவாசம் ஆகியவற்றை கொடி பிரதிபலிக்கிறது என்பதால் அதை நாம் பெருமையாகக் கருத வேண்டும் என்றார் அவர்.


Pengarang :