A. Rahim Kasdi (tengah) bergambar bersama peserta yang menerima baucar pada Majlis Penyerahan Baucar Sempena Hari Natal DUN Sungai Tua dan Penyerahan Back To School JKP Zon 7 di perkarangan Pangsapuri Laksamana Jaya A, Batu Caves pada 21 Disember 2019. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

புதுப் பொலிவுடன் எம்பிஎஸ்ஜே சந்தைகள்

சுபாங் ஜெயா, டிச.24-

சுபாங் ஜெயா நகராண்மைக் கழக மன்ற (எம்பிஎஸ்ஜே) நிர்வாகத்தின் கீழ் இரவு மற்றும் பகல் சந்தைகள் புதிய தோற்றத்தைக் கொண்டுள்ளன. ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு குழு ((ஜே3பி) அமைக்கப்பட்ட நான்கு மாதங்களுக்குப் பின்னர் இந்த அபரிமித மாற்றங்களைக் காண முடிகிறது.

தூய்மை நிர்வாகம் குறிப்பாக வர்த்தக கட்டுப்பாடு, பாதுகாப்பு மற்றும் சிறு அங்காடி வியாபாரிகள் மேம்பாடு போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக எம்பிஎஸ்ஜே லைசென்ஸ் பிரிவு இயக்குநர் முகமது அஸ்லி மிஸ்வான் கூறினார்.
“ஜே3பி உறுப்பினர்கள் எங்களோடு இணையத் தொடங்கியது முதல் இரவு சந்தைகள் முறையாகச் செயல்பட்டன.

கூடாரங்கள் பயனீடும் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டன. இவற்றை விட தூய்மைப் பணிகளுக்காக குத்தகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த செவினத்தை வெற்றிகரமாகக் குறைத்துள்ளோம்” என்றார் அவர்.


Pengarang :