SELANGOR

சிலாங்கூர் திறன் மற்றும் புத்தாக்க கழகத்தின் பரிசு தட்டு அலங்கரிப்பு பயிற்சி 2019.

கிள்ளான், டிசம்பர் 26:

சிலாங்கூர் திறன் மற்றும் புத்தாக்க கழகம் மாநில அளவிலான பல திறன்மிக்க பயிற்சி பட்டறைகளை நடுத்தர வருமான வர்க்கத்தைச் சார்ந்த பெண்மணிகளுக்கு பிரத்தியேகமாக மேற்கொண்டு வருகிறது. வீட்டில் இருக்கும் மாதரும் வேலை செய்பவர்களும் பகுதிநேர வருமானத்தை வீட்டிலிருந்தே ஈட்டும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 17/11/2019- ஆம் திகதி அன்று கிள்ளான் நகராண்மை கழக இ- லைப்ரரி (DEWAN MPK E LIBRARY) மண்டபத்தில் மகளிர்க்கான பரிசு தட்டு அலங்கரிப்பு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

திருமணங்களுக்கும், சுப காரியங்களுக்கும் சீர் கொண்டு போகும் அலங்கார தட்டுகள் தயாரிப்பது, அதில் வைக்கப்படும் தேங்காய், பழங்கள் போன்றவற்றை அழகாகத் தயாரிப்பது, அந்த வைபவங்களில் கொடுக்கப்படும் லட்டு போன்ற இனிப்புப் பலகாரங்களை வைக்கும் அழகிய கைப்பைகள் போன்றவற்றைத் தயாரிப்பது, என பயிற்றுவிக்கப்பட்ட இந்நிகழ்வில் சுமார் 50 மகளிர் பங்கெடுத்து பயனடைந்தனர்.

இந்நிகழ்வினை சுகாதர மற்றும் மகளிர் குடும்பநல ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் புவான் சித்தி மரியா மஹமுது அவர்களின் சிறப்பு அதிகாரியான முஹமட் நபில் நொர் ஹலிம் அவர்கள் அதிகாரப்பூர்வமாக திறப்புரையாற்றி துவக்கி வைத்தார். மேலும் இப்பயிற்சி பட்டறையில் சுங்கை கண்டீஸ் சட்டமன்றம், பண்டமாரான் சட்டமன்றம் பெலாபுவான் கிள்ளான் சட்டமன்றம் ஆகிய திறன்மிக்க மகளிர் மையத்தி்ன் ஒருங்கிணைப்பாளர்
கள் (PENYELIA PUSAT WANITA BERDAYA -PWB)
கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும், சிலாங்கூர் திறன் மற்றும் புத்தாக்க கழகத்தின் தலைவருமாகிய திருவாளர் மாதவன் முனியாண்டி இப்பயிற்சி பட்டறை சிறப்பாக நடைபெற உதவிக்கரம் நீட்டிய கிள்ளான் நகராண்மை கழக உறுப்பினர் திரு. நளன் முனியாண்டி அவர்களுக்கும் ஏனைய நல்லுள்ளங்களுக்கும் தமது நன்றியினை தெரிவித்துக்கொண்டார்.


Pengarang :