Shah (tengah) Zamani (enam, kiri) bergambar bersama penduduk Pangsapuri Sri Tanjung ketika Program Langkah Ke Menara Gading anjuran Kumpulan Slam dan JKP Zon 3 Subang Jaya di Pangsapuri Sri Tanjung, Subang Jaya pada 26 Disember 2019. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
NATIONAL

இளைஞர்களின் ஆற்றலை மேம்படுத்தினால் மட்டுமே சமூக பிரச்னையைக் களைய முடியும்

கோலாலம்பூர், டிச.27-

ஜோகூர் பாருவில் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் அபாயகரமான முறையில் சைக்கிள் சவாரி செய்த 8 பதின்ம வயதினர் கார் ஒன்றினால் மோதப்பட்டு இறந்த சம்பவம் நம் நினைவில், குறிப்பாக சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் நினைவில் அலைமோதிக் கொண்டிருக்கிறது.

ஆண்டுகள் இரண்டை கடந்த போதிலும் , சமூகத்தின் மத்தியில் இன்னமும் இச்சம்பவம் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தை கடுமையாகக் கருத வேண்டும் என்று சமூக அமைப்புகளும் சமூக போராளிகளும் கூறி வருகின்றனர். இன்றைய இளைஞர் சமுதாயத்தை சரியான திசையில் நடத்திச் செல்லவும் மேம்பாடு காணவும் முறையான திட்டமிடல் தேவை.

இதனிடையே, 2030ஆம் ஆண்டுக்குள் பொறுப்புள்ள மலேசியர்களை உருவாக்கும் நோக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள கூட்டு வளப்பத்தை நோக்கி 2030 எனும் கொள்கையானது இளைஞர்களின் வாழ்க்கை முறை மற்றும் மேம்பாடு மீது அதிகளவு கவனம் செலுத்தப்பட்டால் மட்டுமே நிறைவேறு சாத்தியமாகும்.


Pengarang :