NATIONAL

இன்று தொடங்கி பூலாவ் லங்காவி ஒரு தீர்வையற்ற தீவு!

ஈப்போ, ஜன.1-

மலேசியாவில் குறிப்பாக பேரா மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளமாக விளங்கும் பூலாவ் பங்கோர், இன்று தொடங்கி தீர்வையற்ற தீவாக உருவாகியுள்ளதன் வழி புதிய வரலாற்றை படைத்துள்ளது. “தீர்வையற்ற தீவாக அறிவிக்கப்பட்டதன் வாயிலாக ஒரு சுற்றுலா தீவாக விளங்கும் பங்கோர் தீவு மேலும் அதிகமான சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும்” என்று பேரா மாநில சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டான் கார் ஹிங் தெரிவித்தார்.

கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து நலிவடைந்து வரும் இங்கு பிரபலமாக இருக்கும் ‘நீலக் கண் நெத்திலி மீன்’ சந்தை, சுற்றுப் பயணிகளின் வருகை அதிகரித்தால் மீண்டும் செழிப்படையும் என்றும் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார்.
இங்கு மூன்று நட்சத்திர தங்கும் விடுதிகள் உட்பட பேரங்காடிகளை நிர்மாணிக்கத் தனியார் துறையைக் கவர்வது உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்பாட்டுத் திட்டங்களையும் மாநில அரசாங்கம் மேற்கொள்ளும் என்றார் அவர்.

அதேவேளையில், இங்குள்ள பெர்ரி சேவையின் தரத்தை உயர்த்துவதோடு பங்கோர் தீவின் அடையாளமாகத் திகழும் சிவப்பு நிற வேன் மற்றும் டாக்சி சேவைகளின் தரங்களையும் மேம்படுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக டான் கூறினார்.


Pengarang :