NATIONALSELANGOR

புத்தாண்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு நியுமோகோகல் தடுப்பூசி இலவசமாகப் போடப்படும்!

ஈப்போ, ஜன.3-

இவ்வாண்டு ஜனவரி முதல் நாள் தொடங்கி பிறக்கின்ற குழந்தைகள் நியுமோகோகல் தடுப்பூசியை இலவசமாகப் பெறுவதற்கு தகுதி பெறுவர் என்று சுகாதாரத் துறை துணை அமைச்சர் டாக்டர் லீ பூன் சாய் கூறினார். இந்தத் தடுப்பூசி மருந்தை நாடு முழுவதிலும் உள்ள கிளினிக் மற்றும் மருத்துவமனைகளுக்கு விநியோகம் செய்வதில் மலேசிய சுகாதார அமைச்சு ஈடுபட்டுள்ளதாகவும் இது அநேகமாக ஜூன் மாதம் தொடங்கி செயல்படத் தொடங்கும் என்றும் அவர் சொன்னார்.

இந்த நியுமோகோகல் தடுப்பூசி மருந்துக்காக மொத்தம் 60 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் துணையமைச்சர் தெரிவித்தார். முன்னதாக, ஆஸ்துமா போன்ற நுரையீரல் அடைப்பு பிரச்னைகளுக்கு ஒரு தீர்வாக உள்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ‘லெகா’ எனும் சாதனத்தை குனோங் ராப்பாட் சுகாதார கிளினிக்கிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் டாக்டர் லீ பங்கேற்றார்.


Pengarang :