Pulau Ketam di Klang.
SELANGOR

சுங்கை கிள்ளான் தூய்மைப்படுத்தும் பணியில் ‘இண்டெர்செப்டரின்’ ஆக்கப்பூர்வ பங்களிப்பு

ஷா ஆலம், ஜன.9-

சுங்கை கிள்ளானைத் தூய்மைப்படுத்தும் நடவடிக்கைக்கு பெலாண்டா ஓஷியன் கிளின் அப் எனும் அரசு சாரா அமைப்பின் கண்டுப்பிடிப்பான ‘இண்டெர்செப்டர்’ சாதனம் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை ஆற்றியுள்ளது. ஒரு மாத காலத்தில் இச்சாதனத்தின் மூலம் 35 டன் மெட்ரிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன என்று தனது தரப்பு கண்டறிந்துள்ளதாக எல்எல்எஸ்பி திட்டத்தின் நிர்வாகி முகமது சுக்ரி ஷாஹாருடின் தெரிவித்தார்.

இந்தப் புத்தாக்க சாதனமானது இந்த ஆறு நெடுகிலும் அமைப்பக்கப்பட்டிருக்கும் ஏழு பதிவு ஏற்றப் பகுதிகளின் தூய்மைப்படுத்தும் பணிகளை நிறைவு செய்துள்ளதாக அவர் சொன்னார். இந்தச் சாதனம் பொறுத்தப்பட்டதை குறிப்பாக கிள்ளான், அரச பள்ளிவாசல் முன்புறப் பகுதியில் பொறுத்தப்பட்டிருப்பதைக் கண்ணுறும் பொது மக்கள் ஆற்றின் தூய்மை குறித்த விழிப்புணர்வை பெறத் தொடங்கியுள்ளனர் என்ற்ய் முகமது சுக்ரி கூறினார்.

“இந்த ஆற்றைத் தூய்மைப்படுத்தும் பணி தொடந்ர்து நடைபெற்றுவதால், பல்வேறு மாற்றங்களை அங்கு காண முடிகிறது” என்றும் அவர் சொன்னார்.


Pengarang :