SELANGOR

சிறுபான்மை மகளிரை மேம்படுத்த ஆற்றல்மிகு மகளிர் கழகம் இலக்கு

ஷா ஆலம், ஜன. 9:

சிலாங்கூர் மகளிர் கழகம் (ஐடபள்யூபி) சிறுபான்மை பெண்களை ஒருமைப்பாட்டு திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டு மேம்படுத்த இலக்கு வகுத்துள்ளது.
தோட்டப்புற மற்றும் பெல்டா நில குடியேற்றப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் மற்றும் பூர்வீக இன பெண்கள் மீது இத்திட்டம் கவனம் செலுத்தும் என்று ஐடபள்யூபி தலைவர் ஜூவைரியா சுல்கிப்ளி தெரிவித்தார்.

“வெளி உலகம் அறிந்திராத சிறுபான்மை பெண்களுக்கு பாலியல் தொல்லை, குடும்ப வன்முறை, சிறார் பாதுகாப்பு மற்றும் வீட்டின் நிதி நிர்வகிப்பு போன்ற விவகாரங்கள் பற்றி ஐடபள்யூபி வாயிலாக மாநில அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது” என்றார் அவர்.

” இம்மாநில பெண்கள் உட்புற பகுதி அல்லது நகர்ப்புறம் என எங்கு வசித்தாலும் அவர்கள் போதிய கல்வி மற்றும் வாய்ப்புகளைப் பெற்றிருக்க வேண்டும் என்பதே எங்களின் இலக்கு ” என்று சிலாங்கூர் கினியிடம் அவர் விவரித்தார்.


Pengarang :