PUTRAJAYA, 16 Jan — Perdana Menteri yang juga menjalankan tugas Menteri Pendidikan Tun Dr Mahathir Mohamad hadir pada sesi taklimat di Kementerian Pendidikan hari ini. Turut kelihatan Timbalan Menteri Pendidikan Teo Nie Ching (dua, kanan) dan Ketua Setiausaha Kementerian Pendidikan Datuk Dr Mohd Gazali Abas (dua, kiri). –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

கல்வி அமைச்சராக முதல் முறையாக அலுவலகத்திற்கு துன் மகாதீர் வருகை புரிந்தார் !!!

கோலா லம்பூர், ஜனவரி 16:

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை முதல் முறையாக கல்வி அமைச்சின் அலுவலகத்திற்குள் நுழைந்தார். மதியம் 2.40 மணிக்கு டாக்டர் மகாதீரின் வருகையை கல்வி அமைச்சின் பொதுச்செயலாளர் டத்தோ டாக்டர் முகமட் கசாலி அபாஸ் மற்றும் அமைச்சின் உயர் நிர்வாகத்தினர் வரவேற்றனர்.

அனைவருடன் கைகுலுக்கிஅமைச்சின் 18-வது மாடிக்கு டாக்டர் மகாதீர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்குடாக்டர் மகாதீருக்கு முகமட் கசாலி விளக்கமளித்தார்துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் உடன் இணைந்திருந்தார்.

அமைச்சின் உயர் நிர்வாகத்துடன் ஒரு கலந்துரையாடலை டாக்டர் மகாதீர் நடத்தினார்.

கடந்த ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் டாக்டர் மகாதீர் கல்வி அமைச்சராக ஜனவரி 3 முதல் பொறுப்பேற்க முடிவு செய்யப்பட்டது.


Pengarang :