NATIONAL

டோல் கட்டணம்: எதிர் தரப்பின் கூறை கூறலுக்கு செவிசாய்க்காதீர்

ஜோர்ஜ்டவுன், பிப்.3-

டோல் கட்டணத்தில் அரசாங்கம் 18 விழுக்காட்டை குறைத்ததால் கிடைக்கும் பயன்களை மதிப்பிட வேண்டும். மாறாக, எதிர்க்கட்சிகளின் குறைகூறலில் மதி மயங்கி விடக்கூடாது என்று பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை பராமரிப்பு குத்தகை காலம் 2058 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டி அது வரை மக்கள் செலுத்தக் கூடிய டோல் கட்டணங்களுடன் குறைக்கப்பட்டுள்ள கட்டண விகிதத்தோடு ஒப்பிட்டு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர் என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் கூறினார்.

“குத்தகையை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்து டோல் கட்டணத்தை 18 விழுக்காட்டை குறைத்ததால், மக்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று குறிப்பிட்ட தரப்பு கூறி வருகிறது. ஆனால், முந்தைய ஆட்சியின் போது குத்தகையை 20 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஆனால் டோல் கட்டணத்தைக் குறைக்காதது குறித்து அவர்கள் விளக்கவில்லை” என்றார் அவர்.

புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ராம் கர்ப்பால் சிங் ஏற்பாடு செய்த சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட பின்னர் குவான் எங் மேற்கண்டவாறு பேசினார். டோல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால் மக்களும் அரசாங்கமும் மிகப் பெரிய தொகையை மீதப்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

டோல் கட்டணத்தை 18 விழுக்காடு குறைத்தோடு அரசாங்கம் இழப்பீடு எதுவும் செலுத்தத் தேவையில்லாததால், அரசாங்கம் 28 பில்லியன் ரிங்கிட்டை சேமித்துள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.


Pengarang :