Prof Dr Mohd Faiz Abdullah
SELANGOR

வேலை சந்தையை நிறைவு செய்யும் பட்டதாரிகளை எஸ்பிஎஸ் உருவாக்கும்!

ஷா ஆலம், பிப்.4-

நாட்டில் பல்வேறு துறைகளில் உள்ள வேலை வாய்ப்புகளை நிறைவு செய்யக்கூடிய பட்டதாரி மாணவர்களை உருவாக்க சிலாங்கூர் வர்த்தக பள்ளி (எஸ்பிஎஸ்) கடப்பாடு கொண்டுள்ளது. மாணவர்களுக்கு சிறந்த தரத்திலான கல்வி கிடைப்பதை உறுதி செய்ய பிரசித்தி பெற்ற கல்வி கழகங்களைச் சேர்ந்த அனுபவமிக்க விரிவுரையாளர்களை இக்கல்லூரி தேர்வு செய்துள்ளது என்று பேராசிரியர் டாக்டர் முகமது ஃபாய்ஸ் அப்துல்லா கூறினார்.

வர்த்தக நிர்வாகத் துறையில் இளங்கலை பட்டப்படிப்பு பயில விரும்பும் மாணவர்களுக்கு உயர்தரத்திலான வசதிகளை எஸ்பிஎஸ் ஏற்படுத்தியுள்ளது என்று இக்கல்லூரியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மலேசிய கலைஞர் நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.
2017ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட எஸ்பிஎஸ் கல்லூரியில் வர்த்தகத் துறையில் முனைவர் பட்டப்படிப்பு பயிலும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டில் மாநில அரசாங்கம் இக்கல்லூரிக்கு 10 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்தது.


Pengarang :