SELANGOR

சீனாவில் இருந்து அலங்கார மரங்கள் இறக்குமதி: கடத்தல் நடவடிக்கையை சிலாங்கூர் மாகிஸ் முறியடித்தது

ஷா ஆலம், பிப்.10-

மேற்கு கிள்ளான் துறைமுக நுழைவாயில் வழியாக 88,000 ரிங்கிட் மதிப்பிலான பல்வேறு அலங்கார மரங்கள் கடத்தல் நடவடிக்கையை மலேசிய சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் இலாகா (மாகிஸ்) முறியடித்தது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த மரங்கள் இறக்குமதி விதிமுறைகளை மீறியுள்ளதாக சிலாங்கூர் மாகிஸ் இயக்குநர் டாக்டர் தார்மிஸி அலிமின் கூறினார்.

குற்றமிழைத்தது உறுதி செய்யப்பட்டால், 100,00ஒ ரிங்கிட்டுக்கு மேல் போகாத அபராதம் அல்லது கூடிய பட்சம் 6 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று 2011ஆம் ஆண்டு சோதனை மற்றும் தனிமைப்படுத்தும் சட்டத்தின் 15ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.


Pengarang :