Dato’ Menteri Besar Dato’ Seri Amirudin Shari pada 9 Mac 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
SELANGOR

மத்திய அரசுடன் நிபுணத்துவ உறவு வேண்டும்- அமிருடின்

ஷா ஆலம், மார்ச் 8:

முந்தைய தேசிய முன்னணி அரசாங்கம் போன்று மாநில அரசாங்கத்திற்கு நெருக்குதல் அல்லது கொடுமைப் படுத்தாமல், மாநில – மத்திய அரசாங்க உறவு நிபுணத்துவமிக்கதாக இருக்கும் எனத் தாம் நம்புவதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
“சிலாங்கூரில் பக்காத்தான் அரசாங்கம் அருதி பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கமாகும், இதை எதிர்க்கட்சி அரசாங்கம் என வகைப்படுத்த முடியாது” என்றார் அவர்.

“நமக்கு 43-13 அதாவது 3இல் 2 பெரும்பான்மை உள்ளது. இதை எதிர்க்கட்சி அரசாங்கம், மத்திய அரசாங்கம், ஓரமான, ஒதுக்கப்பட்ட ,நடுவன் அரசாங்கம் என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது” என்று அவரது இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் மந்திரி பெசார் தெரிவித்தார்.

பக்காத்தான் நிர்வாகத்தின் போது, கிளந்தாம், திரெங்கானு மற்றும் பகாங் ஆகிய மாநிலங்களை மத்திய அரசாங்கம் ஓரங்கட்டியதில்லை என்றார் அவர்.
எனவே, புதிய மத்திய அரசாங்கமும் அதே நடைமுறையைப் பின்பற்றும் என்று அமிருடின் நம்பிக்கை தெரிவித்தார்.
முந்தைய தே.மு. அரசாங்கம் போன்று புதிய அரசாங்கமும் பேராசைக் கொண்டு பொறுப்பற்ற முறையில் நெருக்குதலைக் கொடுக்காது எனத் தாம் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.


Pengarang :