Pantai Remis, Kuala Selangor. Foto portal Majlis Daerah Kuala Selangor
SELANGOR

உள்நாட்டு சுற்றுலா துறை: ஊக்குவிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்படும்!

கோலாலம்பூர், மார்ச் 9:

சுற்றுலா தொழில்துறையின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு உள்நாட்டு சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டினர் அதிக அளவில் வருகை மேற்கொள்வதை ஊக்குவிக்கிறது. அமைச்சு இவ்வாண்டு 92.8 மில்லியன் உள்நாட்டு சுற்றுப் பயணிகளைக் கவர இலக்கு வகுத்திருப்பதாகவும் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு 76.9பில்லியன் வெள்ளி வருமானத்தை ஈட்டித் தரும் என்றும் மலேசிய சுற்றுலா ஊக்குவிப்பு வாரிய உள்நாட்டு மற்றும் நடவடிக்கைகள் பிரிவு முதிர்நிலை இயக்குநர் டத்தோ டாக்டர் அமார் அப்துல் காப்பார் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு 85.2 லட்சம் சுற்றுப் பயணிகள் வருகை புரிந்ததாகக் கூறிய அவர் இவர்கள் வழி 68.5 பில்லியன் வெள்ளி வருமானம் பெறப்பட்டதாகவும் சொன்னார்.
கோவிட்-19 காரணமாக வெளிநாட்டு சுற்றுப் பயணிகள் எண்ணிக்கை குறைந்தபோதிலும் வர்த்தக மற்றும் வேலை வாய்ப்புகளைத் தொடர சுற்றுப் பயணிகள் அதிகமாக வருகை புரிவது அவசியம் என்றார் அமார்.


Pengarang :