Pengerusi Jawatankuasa Tetap Kesihatan, Kebajikan, Pemberdayaan Wanita Dan Keluarga, Dr Siti Mariah Mahmud pada sidang media di
SELANGOR

‘2020 சிலாங்கூர் மகளிர் தயாரிப்பு பொருள்’ கண்காட்சிக்கு வாரீர்

ஷா ஆலம், மார்ச் 9:

இங்குள்ள ஷா ஆலாம் மாநாட்டு மையத்தில் நாளைத் தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறவிருக்கும் ‘2020 சிலாங்கூர் மகளிர் தயாரிப்பு பொருள் கண்காட்சிக்கு’ வருகையளிக்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். சிலாங்கூர் மகளிர் தினத்தையொட்டி நடைபெறும் இந்நிகழ்ச்சி மகளிர் தொழில்முனைவரின் தயார்ப்புப் பொருட்களை பொது மக்கள் பார்வையிட இது ஒரு தளமாக இருக்கும் என்று சுகாதார,, சமூகநலன். மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாஹ்முட் கூறினார்.

“இக்கண்காட்சியில் குடும்ப மாதர்கள் மற்றும் ‘காசே ஈபு ஸ்மார்ட் சிலாங்கூர்’ திட்டத்தின் கீழ் உதவி பெறும் தனித்து வாழும் தாய்மார்கள் மற்றும் ‘ஹிஜ்ரா’ உதவி பெற்ற தொழில்முனைவர்களும் பங்கெடுக்க உள்ளனர்” என்றார் அவர்.
“இந்நிகழ்ச்சியானது மகளிர் தங்களின் தொழில் திறன்களை வெளிக்கொண்டர வாய்ப்பளிக்கும் என்பதோடு சிலாங்கூரின் பொருளாதார மேம்பாட்டிருக்கு இது ஓர் ஊக்குவிப்பாக அமையும்” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


Pengarang :