YDP Pekawanis, Datin Seri Masdiana Muhamad (tengah) bergambar bersama penerima Anugerah Penyelia PWB Terbaik ketika Majlis Apresiasi Sedekad Pusat Wanita Berdaya di Shah Alam Convention Centre, Shah Alam pada 7 Mac 2020. Foto HAFIZ OTHMAN/SELANGORKINI
SELANGOR

மகளிர் மேம்பாட்டு மையத் திட்டங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட வேண்டும்

ஷா ஆலம், மார்ச் 9:

மகளிர் மேம்பாட்டு மையத்தின் திட்ட வடிவமைப்பு அவ்வப்போது மேம்படுத்தப்படுவது அவசியம் என்று சிலாங்கூர் மகளிர் சமூக நல அமைப்பு திலைவர் டத்தின்ஸ்ரீ மாச்டியானா முகமது கூறினார். இந்த மையத் திட்டமானது மகளிரைத் திடர்ந்து மேம்படுத்தும் ஒரு திட்டமாக இருத்தல் அவசியமாகும். எந்த ஒரு துறையைச் சார்ந்த மகளிரும் இத்திட்டத்தில் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“முன்பு, இது போன்ற சமூக திட்டங்களில் பங்கேற்க பெண்களை அடையாளம் காண கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருந்தது” என்றார்.

“ஆனால் இப்போது, இத்திட்டங்களில் பங்கேற்க பலரும் முந்திக் கொண்டு வருகின்றனர்” என்று ஷா ஆலம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆற்றிய உரையில் அவர் தெரிவித்தார்.
இந்த சமுக அமைப்பின் பத்தாண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட மையத்தின் சின்னத்தை டத்தின்ஸ்ரீ மாடியானா வெளியிட்டார்.


Pengarang :