PUTRAJAYA, 9 Mac — Perdana Menteri Tan Sri Muhyiddin Yassin (kanan) semasa mengumumkan pelantikan para Jemaah Menteri di Bangunan Perdana Putra hari ini. Turut kelihatan, Ketua Setiausaha Negara Datuk Seri Mohd Zuki Ali. –fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

டான்ஸ்ரீ முகைதீன் தலைமையில் துணைப் பிரதமர் இல்லாத அமைச்சரவை!

புத்ரா ஜெயா, மார்ச் 10:

பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் மார்ச் 9 ஆம் தேதி புத்ரா ஜெயா, பெர்டானா புத்ராவில் புதிய அமைச்சரவை பட்டியலை அறிவித்தார். மாட்சிமை தங்கிய மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்- முஸ்தாபா பில்லா ஷாவின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்ட இந்த அமைச்சரவைப் பட்டியலில் துணைப் பிரதமர் பதவி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நேரடியாக அஞ்சல் செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நான்கு உயர்நிலை அமைச்சர்களை அறிவித்தார்.

பொருளாதாரம், பாதுகாப்பு,கட்டமைப்பு மேம்பாடு , கல்வி மற்றும் சமூகம் ஆகிய துறைகள் தொடர்பாக அமைச்சரவை விவகாரங்களை ஒருங்கிணக்க இவர்கள் இப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.  மக்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற சிலரும் இந்த அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களில் பிரதமர் துறை (சமய விவகாரம்) அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் கூட்டரசு பிரதேச முஃப்டி டத்தோஸ்ரீ சுல்கிப்ளி முகமது அல்-பக்ரி மற்றும் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கும் சிஐஎம்பி குழும தலைமை நிர்வாக அதிகாரி தெங்கு டத்தோஸ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிசும் அடங்குவர்.

பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியில் இருந்து 10 பேர், அம்னோவில் இருந்து 9 பேர், சரவாக் கூட்டணி கட்சியில் இருந்து நால்வர், பாஸ் கட்சியில் இருந்து மூவர், பிபிஎஸ், மசீச மற்றும் மஇகாவில் இருந்து தலா ஒருவரும் அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் மற்றும் துணையமைச்சர்கள் அனைவரும் மார்ச் 10 ஆம் தேதி இஸ்தானா மெலாவாத்தியில் மாமன்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

முழு அமைச்சரவை பட்டியல்:

உயர் நிலை அமைச்சர் – அனைத்துலக வாணிப தொழிற்துறை அமைச்சர்:
டத்தோஸ்ரீ முகமது அஸ்மின் அலி
துணையமைச்சர்: டத்தோ லிம் பான் ஹோங் (செனட்டராக நியமிக்கப்படுவார்)

உயர் நிலை அமைச்சர் – தற்காப்பு அமைச்சர்: டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்
துணையமைச்சர்: டத்தோஸ்ரீ இக்மால் ஹிஷாம் அப்துல் அஜிஸ்

நிதியமைச்சர்: தெங்கு டத்தோஸ்ரீ ஸாஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் (செனட்டராக நியமிக்கப்படுவார்)
துணையமைச்சர் I: டத்தோ அப்துல் ரஹீம் பக்ரி
துணையமைச்சர் II: முகமது ஷாஹார் அப்துல்லா

உயர் நிலை அமைச்சர் – பொதுப் பணி அமைச்சர்: டத்தோஸ்ரீ ஃபாடிலா யூசோப்
துணையமைச்சர்: டத்தோ டாக்டர் ஷாருடின் முகமது சாலே

உயர் நிலை அமைச்சர்- கல்வி அமைச்சர்: டாக்டர் முகமது ரட்ஸி முகமது ஜிடின்
துணையமைச்சர் I: டத்தோ டாக்டர் மா ஹாங் சூன் (செனட்டராக நியமிக்கப்படுவார்)
துணையமைச்சர் II: முஸ்லிமின் யாஹ்யா

பிரதமர் துறை அமைச்சர் (பொருளாதாரம்): டத்தோஸ்ரீ முஸ்தாபா முகமது
துணையமைச்சர் : அர்துர் ஜோசப் குரூப்

பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு பணிகள்): டத்தோஸ்ரீ முகமது ரிடுவான் முகமது யூசோப்
துணையமைச்சர் :டத்தின் மஸ்துரா யாஸிட்

பிரதமர் துறை அமைச்சர் (நாடாளுமன்றம் மற்றும் சட்டம்) டத்தோ தக்கியுடின் ஹசான்
துணையமைச்சர் : டத்தோ எடின் ஷாஸ்லீ ஷித்

பிரதமர் துறை அமைச்சர் (சமய விவகாரம்): டத்தோஸ்ரீ சுல்கிப்ளி முகமது அல்-பக்ரி (செனட்டராக நியமிக்கப்படுவார்)
துணையமைச்சர்: அகமது மர்சூக் ஷாரி

பிரதமர் துறை அமைச்சர் (சபா மற்றும் சரவாக் விவகாரம்): டத்தோஸ்ரீ பங்ளிமா டாக்டர் மெக்சிமஸ் ஓங்கிலி
துணையமைச்சர்: டத்தோ ஹாஜா ஹானிஃபா ஹாஜார் தாய்ப்

போக்குவரத்து அமைச்சர்: டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங்
துணையமைச்சர்: ஹஸ்பி ஹபிபோலா

சுற்றுச் சூழல் அமைச்சர்: டத்தோ துவான் இப்ராகிம் துவான் மான்
துணையமைச்சர்: டத்தோ டாக்டர் அகமது மஸ்ரிசால் முகமது (செனட்டராக நியமிக்கப்படுவார்)

மனித வள அமைச்சர்: டத்தோஸ்ரீ எம்.சரவணன்
துணையமைச்சர்: அவாங் ஹாஷிம்

கூட்டரசு பிரதேச அமைச்சர்: டான்ஸ்ரீ அனுவார் மூசா
துணையமைச்சர்: டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார்

மகளிர் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சர்: டத்தோஸ்ரீ ரீனா முகமது ஹருண்
துணையமைச்சர்: டத்தோ சித்தி ஜைலா முகமது யூசோப்

உயர் கல்வி அமைச்சர்: டத்தோ டாக்டர் நோராய்னி அகமது
துணையமைச்சர்: டத்தோ டாக்டர் மன்சோர் ஒத்மான்

எரிபொருள் மற்றும் இயற்கை வள அமைச்சர்: டத்தோ டாக்டர் சம்சுல் அனுவார் நசாரா
துணையமைச்சர்: அலி அனாக் பிஜூ

உள்துறை அமைச்சர்: டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின்
துணையமைச்சர் I: டத்தோஸ்ரீ டாக்டர் இஸ்மாயில் முகமது சாயிட்
துணையமைச்சர் II: ஜோனாதன் யாசின்

சுகாதார அமைச்சர்: டத்தோஸ்ரீ டாக்டர் அடாம் பாபா
துணையமைச்சர் I: டத்தோ டாக்டர் நோர் அஸ்மி கசாலி
துணையமைச்சர் II: டத்தோ ஆரோன் அகோ டாகாங்

விவசாயம் மற்றும் உணவு தொழிற்துறை அமைச்சர்: டத்தோஸ்ரீ டாக்டர் ரோனால்டு கியாண்டி
துணையமைச்சர் I: டத்தோஸ்ரீ அகமது ஹம்சா
துணையமைச்சர் II: டத்தோ சே அப்துல்லா மாட் நாவி

புற நகர் மேம்பாட்டு அமைச்சர்: டத்தோ டாக்டர் அப்துல் லத்திஃப் அகமது
துணையமைச்சர் I: டத்தோ அப்துல் ரஹ்மான் முகமது
துணையமைச்சர் II: டத்தோ ஹென்றி சும் அகோங்

வெளியுறவு அமைச்சர்: டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் துன் உசேன்
துணையமைச்சர்: டத்தோ கமாருடின் ஜாஃபார்

உள்நாட்டு வாணிப மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர்: டத்தோ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி
துணையமைச்சர்: டத்தோ ரோசோல் வாஹிட்

தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் : டத்தோஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா
துணையமைச்சர்: டத்தோ ஜாஹிடி ஜைனுல் அபிடின்

வீடமைப்பு மற்றும் ஊராட்சி துறை அமைச்சர்: ஹாஜா ஜூரைடா கமாருடின்
துணையமைச்சர்: டத்தோஸ்ரீ இஸ்மாயில் அப்துல் முத்தாலிப்

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர்: கைரி ஜமாலுடின்
துணையமைச்சர்: அகமது அம்சாட் ஹாஷிம்

தொழில் முனைவர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர்: டத்தோஸ்ரீ டாக்டர் வான் ஜூனைடி துங்கு ஜாஃபார்
துணையமைச்சர்: டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின்

தோட்ட மற்றும் மூலத் தொழிற்துறை அமைச்சர்: டத்தோ டாக்டர் முகமது கைருடின் அமான் ரசாலி
துணையமைச்சர் I: டத்தோஸ்ரீ டாக்டர் வீ ஜெக் செங்
துணையமைச்சர் II: வில்லி அனாக் மொகின்

சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சர்: டத்தோஸ்ரீ நான்சி ஷுக்ரி
துணையமைச்சர்: டத்தோ டாக்டர் ஜெஃப்ரி ஜி.கிட்டிங்கான்

ஒற்றுமை துறை அமைச்சர்: டத்தோ ஹாலிமா முகமது சாடிக்
துணையமைச்சர்: டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங்

இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் : டத்தோஸ்ரீ ரீசால் மெரிக்கான் நைனா மெரிக்கான்
துணையமைச்சர்: வான் அகமது ஃபாய்சால் வான் அகமது கமால்
(செனட்டராக நியமிக்கப்படுவார்)


Pengarang :