Petugas memeriksa suhu badan Dato’ Seri Amirudin Shari semasa lawatan rasmi Dato’ Menteri Besar ke Westport Malaysia Sdn Bhd di Perlabuhan Klang pada 12 Mac 2020. Foto FIKRI YUSOF/SELANGORKINI
SELANGOR

கோவிட் 19 பரவல்; சிலாங்கூர் பொது நிகழ்ச்சிகளை ரத்து செய்தது

ஷா ஆலம், மார்ச் 12:

கோவிட்-19 பரவலைத் தொடர்ந்து சில பொது நிகழ்ச்சிகளை சிலாங்கூர் அரசு ரத்து செய்துள்ளது என்று அதன் மந்திரி புசார் அமிருதின் ஷாரி தெரிவித்தார்.

வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் அவை செய்யப்பட்டது என்று அமிருதின் கூறினார்.
“இதில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி சிலாங்கூர் வேலை கண்காட்சி 2020/Selangor Job Fair 2020” ஆகும்.

“திட்டமிடப்பட்ட திட்டம் முக்கியமானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தால், திட்டத்தின் போது பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும்” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பொது நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் ஆலோசனையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வைரஸைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுக்கும் என்று அமிருதின் கூறினார்.

“மலேசியாவின் சுகாதார அமைச்சினால் வரையறுக்கப்பட்ட முக கவசங்களைப் பயன்படுத்துதல் மற்றும் கை சுத்தப்படுத்தியை (hand sanitizer) பயன்படுத்துவது போன்ற தடுப்பு நடவடிக்கைகள் தொற்றுநோயைத் தடுக்க பின்பற்றப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

கோவிட்-19 பணிக்குழுவை (உடநடியாக நிறுவ சிலாங்கூர் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் Majlis Tindakan Ekonomi Selangor (MTES)) ஒப்புதல் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பணிக்குழுவிற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி அஹ்மத் தலைமை தாங்குவார். மாநில அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்திய டாக்டர் சிட்டி மரியா அவருக்கு உதவுவார் என்றும் அவர் சொன்ன்னார்.
இந்த அணியில் கிறிஸ்டோபர் லீ குவோக் சூங், டாக்டர். அடீபா கமருல்சமான், டாக்டர். ஃபட்ஸிலா கமலுடின், பேராசிரியர் டாக்டர் அப்துல் ரஷீத் அப்துல் ரஹ்மான் மற்றும் டாக்டர் யாப் வீ அவுன்.

இதற்கிடையில், ஒரு தனி அறிக்கையில், யுஐடிஎம் ஷா ஆலம் மற்றும் அதன் பிற வளாகங்களில் நடக்கவிருந்த 92-வது பட்டமளிப்பு விழாவை ஒத்திவைத்துள்ளது.

சுகாதார அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) தொற்றுநோயை ஒரு pandemik தொற்றுநோய் என்று அறிவித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் தெரிவித்தார்.


Pengarang :