SELANGOR

பெட்டாலிங் வட்டாரத்தில் 80 சதவீதம் குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு வந்தது

ஷா ஆலம், மார்ச் 19:

கோத்தா டமன்சாரா நீர் தேக்கி மற்றும் எப்பிங்கம் நீர் தேக்கி ஆகியவற்றில் நீர் அளவு குறைந்த நிலையில் நீர் விநியோகம் தடைபட்டது. இன்று காலையில் நீர் அளவு 80 சதவீதம் எட்டியதாக சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (ஆயர் சிலாங்கூர்) அறிவித்துள்ளது. மேலும் சவுஜான மற்றும் டமன்சாரா டாமாய் ஆகிய இரண்டு நீர் தேக்கிகளில் இன்னும் வழக்க நிலைக்கு வரவில்லை என்று அப்துல் அலிம் மாட் சோம் தெரிவித்தார்.

” குடிநீர் விநியோகம் வழக்க நிலைக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது நகர்வு கட்டுபாடு கட்டளை அறிவிக்கப்பட்ட நிலையில் எல்லா பயனீட்டாளர்கள் குடிநீர் விநியோகத்தை பெறுவதற்கு சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகவே, பயனீட்டாளர்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்,” என்று அப்துல் அலிம் கூறினார்.


Pengarang :