KUANTAN, 16 Mac — Orang ramai dinasihat agar tidak membuat pembelian panik barangan keperluan asas susulan pelbagai dakwaan palsu mengenai jangkitan COVID-19. Kerajaan turut memberi jaminan kepada orang ramai bahawa tiada keperluan untuk melakukan pembelian panik kerana bekalan makanan adalah mencukupi dan boleh didapati pada setiap masa.?– fotoBERNAMA (2020) HAK CIPTA TERPELIHARA
NATIONAL

வாங்கும் பொருட்களுக்கு வரையரை நிர்ணயிப்பீர்! – பயனீட்டாளர் சங்கம்

ஷா ஆலம், மார்ச் 20:

மக்கள் அனைவருக்கும் போதுமான அளவு பொருட்கள் இருப்பதை உறுதி செய்ய பேங்காடி கடைகாரர்கள் வாங்கப்படும் பொருட்களுக்கு வரையரை விதிக்க வேண்டும் என்று ஷா ஆலம் மற்றும் சுபாங் ஜெயா பயனீட்டாளர் சங்கத் தலைவர் டத்தோ டாக்டர் ஜேக்கப் ஜியார்ஜ் கூறினார்.

பதற்றம் காரணமாக ஒரு சிலர் அதிகளவு பொருட்கள் வாங்குவதால் பலருக்கு பொருட்கள் பற்றாக் குறை ஏற்படுகிறது என்றார் அவர். வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு வரையரை நிபந்தனை விதிப்பதன் மூலம் இதர வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் கிடைப்பதை பேரங்காடிகள்,உறுதி செய்யலாம் என்றார் அவர்.

கோவிட்-19 பேரிடரை எதிர்கொள்ளும் இவ்வேளையில் பேரங்காடிகளின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என்று அவர் விவரித்தார். அதே வேளையில், பொதுமக்களில் சிலர் இணையம் வழியாக பொருட்கள் வாங்குவதை ஜேக்கப் வரவேற்றார்.


Pengarang :