SELANGOR

கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்தார் !!!

ஷா ஆலம், ஏப்ரல் 10:

கோத்தா கெமுனிங் சட்ட மன்ற அலுவலகம் இது வரையில் 10 கட்டங்களாக சுமார் 1500 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் செய்துள்ளதாக கோத்தா கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான மாண்புமிகு கணபதி ராவ் தெரிவித்தார். அவரோடு அலுவலகத்தின் பணியாளர்கள் காலை 9 மணி தொடங்கி பொருட்களை தொகுதியின் பல்வேறு இடங்களுக்கு விநியோகம் செய்து வருவதாக பெருமிதம் கொண்டார். நடமாடும் கட்டுப்பாடு ஆணை (பிகேபி) காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இந்த உதவி வாழ்வாதார சுமையை குறைக்க உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் விவரித்தார்.

” இது மட்டுமின்றி, ஷா ஆலம் மாநகராட்சி மன்ற உறுப்பினர்களான யுகாராஜா மற்றும் ஹெல்மி ஆகிய இருவரும் தனது பணியினை மேலும் சுலபமாக்கி இருக்கின்றனர். ஏழை எளிய மக்களுக்கு இந்த பொருட்கள் சென்றடைய இவர்களின் பங்கு மிகவும் அளப்பரியது. மேலும், பல அரசு சாரா இயக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் உணவு பொருட்களை எங்களது அலுவலகத்திற்கு வழங்கி வருகின்றனர். இந்த வேளையில், உதவிய அனைத்து தரப்பினருக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று சிலாங்கூர் இன்றுக்கு தெரிவித்தார்.


Pengarang :